மழைநாளில் கண்ட இன்னொரு கதை.
Thursday, August 28, 2008
மெல்ல நட மெல்ல நட
மழை நாளிலே என்னத்தைப் படம் பிடிக்க என்று சலிப்புடன் கிளம்பினேன். ஆனால் அந்த அரையிருட்டில் நிறங்கள் பளிச்சென என்ன அழகு...
அக்காச்சியின் காலணியைப் பார்த்ததுமே சுட்டுவிட்டேன்.
(இதே நாளில் எடுத்த இன்னொன்று)
Tuesday, August 19, 2008
Flickr & Interstingness
Tuesday, August 12, 2008
பிட்டுக்கு கமரா சுமந்த கதை

Breaking free, [ பெரிதாப் பார்க்க படத்தைச் சொடுக்குங்க )]
எதையாவது படமெடுங்க என்று இலகுவாகச் சொல்லியாச்சு..மண்டையைப் பிய்ச்சுக் கொள்ளுறது நாங்கதானே!! துளசிம்மா சொன்ன மாதிரி.."என்னைச் சுத்தி எல்லாமே அழகா இருக்கு". :O)
இந்தப் படம் எடுக்கத் தேவைப்பட்டவை:
1. $0.50 க்கு விற்கும் bubble கரைசல்
2. கிட்டத்தட்ட 1 மணித்தியாலம்
3. இடையூறு குறைந்த இடம் (எடுப்புக் காட்டோணுமெண்டா இடையூறு நிறைந்த இடம்) :O)
4. மிக மிக முக்கியமாத் தேவையானது கமரா, with charged battery & memory card with lots of space
5. (உதவியாள் இருத்தல் விரும்பத்தக்கது.)
எனது செய்முறை:
மத்தியானச் சாப்பாட்டு நேரத்தில் முன்னாலிருந்த பூங்காவைக் கடந்து அதற்கடுத்த பூங்காவுக்குப் போய், இடையூறு குறைந்த மூலையாகப் பார்த்து நின்று கொண்டேன். கமராவை ஆயத்தப்படுத்தி வலது கையில் எடுத்தாயிற்று. குமிழி ஊது கருவி இடது கையில். ஆரம்பித்தேன். Bubble.. toil & trouble. குமிழி ஊதினால் நான் கிளிக்க முதல் பறந்தோடி விட்டது, அல்லது கூட்டுச் சதியாய் சூரியன் இருந்த திசை நோக்கி வீசின காற்றில் பாய்ந்தடித்துப் போனது. சூரியனை நேரடியாப் பார்த்துப் படமெடுக்கக் கூடாது என்று வேறு கவனம். விட்டேனா பார் உன்னை என்று துரத்தி துரத்தி எடுத்த 100-150+ படங்களில் 'அமைந்தது' இது.
400+ படமெடுத்து 10தான் தேறின இன்னொரு படப்பிடிப்புக்கதை வேறொரு நாளைக்கு.
பி.கு: தேவையான பொருட்கள் பட்டியலில் விடுபட்டுப் போனது: பொறுமை. கிலோக் கணக்கில் வேண்டும்.